ஆக்ஷனுக்கு மாறிய மணிரத்னம்.. கமல்ஹாசனின் 234வது படத்தில் இணைந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள்..!

நடிகர் கமல்ஹாசனின் புதிய படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.;

Update:2023-11-03 15:40 IST

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்காலிகமாக 'KH 234' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னோட்ட காட்சிகளில் படத்தின் தலைப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ், இயக்குனர் மணிரத்னத்துடன் பேசுவது இடம்பெற்றுள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு அன்பறிவ் மாஸ்டர்கள் உடன் கமல்ஹாசன் இணைய உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்