ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சமூகவலைதளத்தில் சர்ச்சையை கிளப்பிய மலையாள திரைப்பிரபலங்கள்

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

Update: 2024-01-22 11:15 GMT

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில் மலையாள திரைப்பிரபலங்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பி உள்ளனர். நடிகைகள் பார்வதி திருவோது, ரிமா கலிங்கல், இயக்குனர்கள் ஆசிக் அபு, ஜியோ பேபி போன்ற மலையாள திரைப்பிரபலங்கள் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை தங்கள் சமூக வலைதள பக்கதில் பகிர்ந்துள்ளனர்.

அந்த புகைப்படத்தில் '1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போதும் இருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் இந்த பதிவை பலர் பாரட்டியும் விமர்சித்தும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை பார்வதி திருவோது இன்ஸ்டாகிராம் பதிவு:-

நடிகை ரிமா கலிங்கல் இன்ஸ்டாகிராம் பதிவு:-

இயக்குனர் ஆசிக் அபு இன்ஸ்டாகிராம் பதிவு:-

இயக்குனர் ஜியோ பேபி இன்ஸ்டாகிராம் பதிவு:-

Tags:    

மேலும் செய்திகள்