சினிமாவால் அமைதி இழந்து விலகிய நடிகை சனாகான்

சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் சனாகான். சினிமாவில் பணம், புகழ் எல்லாம் கிடைத்தாலும், நிம்மதி என்ற ஒன்று கிடைக்கவில்லை. அதனால் தான் ஒதுங்கினேன் என கூறி இருக்கிறார்.;

Update:2022-07-26 14:17 IST

தமிழில் சிம்புவின் 'சிலம்பாட்டம்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சனாகான். தொடர்ந்து பரத்துடன் 'தம்பிக்கு எந்த ஊரு', பிரகாஷ் ராஜுடன் 'பயணம்', சத்யராஜுடன் 'ஆயிரம் விளக்கு' உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சனாகானுக்கும் மெர்வின் லூயிஸ் என்ற நடனக் கலைஞருக்கும் காதல் மலர்ந்து பின்னர் பிரிந்தனர். அதன்பிறகு குஜராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு முப்தி அனஸ் என்பவரை சனாகான் 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது சனாகான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது, ''எனக்கு சினிமாவில் பணம், புகழ், பெயர் எல்லாம் கிடைத்தது. ஆனால் அமைதி கிடைக்கவில்லை. மகிழ்ச்சி இல்லாமல் இருந்தேன். மனஅழுத்தம் ஏற்பட்டது, அதனாலேயே சினிமாவில் இருந்து விலகினேன். ஒரு எரியும் கல்லறையும் அதில் நான் இருப்பது போன்றும் அடிக்கடி கனவு வந்தது. நீ மாறவில்லையென்றால் உனக்கான முடிவு இதுதான் என்று இறைவன் எச்சரிப்பதுபோல் அது இருந்தது. அதன்பிறகு ஊக்கமளிக்கும் உரைகளை கேட்டேன். ஹிஜாப் அணிந்தேன். மகிழ்ச்சி ஏற்பட்டது" என்று கூறியுள்ளார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்