நடன கலைஞர்களுக்கு உதவிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ‘மாவீரன்' படத்தில் தனது பாடல் காட்சியை 500-க்கும் மேற்பட்ட சென்னை நடன கலைஞர்களை வைத்து படமாக்கி உள்ளார்.;

Update:2023-02-23 06:36 IST

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்ற 'சீன் ஆ சீன் ஆ' என்ற பாடல் காட்சி எண்ணூரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த பாடல் காட்சியில் அதிக எண்ணிக்கையில் நடன கலைஞர்களை பயன்படுத்தி உள்ளனர்.

பாடல் காட்சிகளில் வெளிமாநில நடன கலைஞர்களும் பங்கேற்பது வழக்கம், ஆனால் சிவகார்த்திகேயன் தனது பாடல் காட்சியை 500-க்கும் மேற்பட்ட சென்னை நடன கலைஞர்களை வைத்து படமாக்கி உள்ளார். அவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து இந்த உதவியை செய்துள்ளார்.

இதற்காக நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் சின்னி பிரகாஷ், பாபு, மாரி ஆகியோர் சிவகார்த்திகேயன் மற்றும் படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின், தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து உள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த இந்த பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின், சுனில் நடிக்கும் சண்டை காட்சி படமாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்