ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள 'பி.டி.சார்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'பி.டி.சார்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-05-23 02:03 GMT

சென்னை,

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது 'பி.டி.சார்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகும் 25-வது திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியரின் வாழ்வியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 'பி.டி.சார்' படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'நக்கல் புடிச்சவன்' என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ள இந்த பாடலை ஹிப்ஹாப் தமிழா, ரிஹானா பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பி.டி.சார்' திரைப்படம் நாளை (மே 24) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்