விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டிரைலர் வெளியானது..!

விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Update: 2023-06-17 16:57 GMT

சென்னை,

அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் கதாநாயகனான விக்ரம் பிரபுவுக்கு சாதாரண வெளிச்சத்தில் கண்கள் தெரியாது என்று டிரைலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த ஒன்லைனை சுற்றி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான டிரைலர் காட்சிகளும் சுவாரசியமான படத்தின் ஒன்லைனும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்