'சந்திரமுகி 2' படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

'சந்திரமுகி 2' படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2023-09-03 07:43 GMT

சென்னை,

சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்