68-வது படத்துக்கு தயாரான விஜய்...!

நடிகர் விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் பட வேலையாக அமெரிக்கா சென்றுள்ளனர்;

Update:2023-08-28 12:41 IST

லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் ஒருவருக்கு ஜோதிகாவும் இன்னொருவருக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. ஏற்கனவே அழகிய தமிழ் மகன், பிகில் படங்களில் விஜய் இருவேடங்களில் நடித்து இருக்கிறார். இதில் பிரபுதேவா, மாதவன், ஜெய் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் பட வேலையாக அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு விஜய் உடல் முழுவதும் ஸ்கேன் செய்ய உள்ளனர். படத்தில் விஜய் தோற்றத்தை நவீன தொழில் நுட்பம் மூலம் வடிவமைப்பதற்காகவே ஸ்கேன் செய்ய இருக்கிறார்கள்.

ஏற்கனவே கமல்ஹாசனின் இந்தியன் 2, ஷாருக்கானின் பேன் ஆகிய படங்களில் இந்த ஸ்கேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்