'விஷ்ணு விஷால் 21' படத்தின் புதிய அப்டேட்

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Update: 2024-02-17 20:26 GMT

சென்னை,

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணி 'விஷ்ணு விஷால் 21' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது குறித்த தகவலை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஷ்ணு விஷால் 21 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. பணியில் இயக்குனர் ராம்குமார் உடன்... எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்