கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் படம் வருமா?

Update: 2023-07-13 06:25 GMT

கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியானது. தற்போது இந்தியன் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் தயாராக இருக்கிறது. தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டம் உள்ளது.

இந்த நிலையில் கவுதம்மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்த வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என்று ஏற்கனவே கவுதம்மேனன் தெரிவித்து இருந்தார். ஆனால் படவேலைகளை தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை. கமல்ஹாசனும் வேறு படங்களில் நடிக்க இருக்கிறார்.

இதனால் வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை கைவிட்டுவிட்டதாக தகவல் பரவியது. இதற்கு கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து கமல்ஹாசனிடம் பேசியுள்ளேன். கதை என்ன மாதிரி இருக்கும் என்பதையும் தெரிவித்து இருக்கிறேன். கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படங்களின் நிலையை பொறுத்து வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் உருவாகும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்