ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி வைத்த பட நிறுவனம்!

கனடாவில் டொரான்டோ நகரில் அமைந்துள்ள ஐடியல் குழுமம், ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனத்தை தொடங்க இருக்கிறது.

Update: 2017-02-13 09:09 GMT
பட தயாரிப்பு மற்றும் வினியோக தொழிலில் ஈடுபட உள்ள இந்த நிறுவனத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி வைத்தார்.

ஏ.ஆர்.ரகுமான் டைரக்டராக அறிமுகமாகும் ‘லெ மஸ்க்’ படத்தையும், அவர் கதை எழுதி விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘99 சாங்க்ஸ்’ படத்தையும் ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “நான் என்னுடைய திட்டங்கள் மூலம் எந்தவிதமான ரசிகர்களை சென்றடைய விரும்புகிறேனோ, அதற்காக இந்த ஐடியல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருக்கிறேன்” என்றார்!

மேலும் செய்திகள்