பேரரசு டைரக்‌ஷனில் விஷால்-டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கும் படம்

‘வீராசாமி’ படத்துக்குப்பின் டி.ராஜேந்தர், ‘ஒரு தலை காதல்’ என்ற படத்தை உருவாக்கி வந்தார்.

Update: 2017-06-20 06:21 GMT
 இந்த படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்கிடையில், கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில், ‘கவண்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் டி.ராஜேந்தர் இணைந்து நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து டி.ராஜேந்தருக்கு பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி வந்த வாய்ப்புகளில், விஷால் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் அவருடன் டி.ராஜேந்தர் இணைந்து நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தை பேரரசு டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையில், டி.ராஜேந்தர் கதை-திரைக்கதை -வசனம்-பாடல்கள்-இசை-ஒளிப்பதிவு-டைரக்‌ஷனில், ஒரு பிரமாண்டமான படம் தொடங்க இருக்கிறது. கதாநாயகன்-கதாநாயகி இருவரும் புதுமுகங்கள். கதாநாயகன் மலேசியாவை சேர்ந்தவர். இதில், டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்