சம்பளத்தை கொஞ்சமாக உயர்த்தும் ‘நகைச்சுவை!’

இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் தனது சம்பளத்தை கொஞ்சமாக உயர்த்தி இருக்கிறார்!

Update: 2018-05-02 06:49 GMT
தமிழ் பட உலகில், ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர், அந்த இரண்டெழுத்து நடிகர்தான். இவர், சத்தமே இல்லாமல், நூறு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் ஆனதும், இரண்டெழுத்து நகைச்சுவை நடிகரின் ‘கால்ஷீட்’ கேட்டு, ஒரே நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் நெருக்கி வருகிறார்கள். இதை பயன்படுத்தி இரண்டெழுத்து நடிகர் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தவில்லை. தயாரிப்பாளர்களின் நலன் கருதி, கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை உயர்த்தி வருகிறார்! 

மேலும் செய்திகள்