சினிமா துளிகள்
அக்கறையுடன் அந்த டைரக்டர்!

‘நம்பர்-1’ நடிகையின் காதலரை பார்த்து மற்ற நடிகைகள் 2 வகையில் பொறாமைப்படுகிறார்களாம்.
ஒன்று, அந்த நடிகையின் கணிசமான சம்பளம். இன்னொன்று, நடிகையின் மீது காதலுடன் அதிக அக்கறையும் காட்டி வரும் காதலர்.

‘நம்பர்-1’ பயங்கர கோபக்காரர். அவருக்கு நேர் மாறானவர், காதலர். சாந்த சொரூபி. “நடிகையின் காதல் கிடைத்தது நான் செய்த பூர்வஜென்ம பந்தம்” என்று உணர்ச்சிவசப் படுகிறாராம்!