சினிமா துளிகள்
டைரக்டர் திட்டத்தை மாற்றிய நடிகை!

‘கல்...கண்ணாடி...’ என்று படம் எடுத்து வெற்றி பெற்ற மூன்றெழுத்தில் பெயரை கொண்ட டைரக்டர் அவர்.
‘காமெடி’ படம் எடுப்பதில் கில்லாடி என்று பெயர் வாங்கியவர் அடுத்து, ஒரு பெரிய கதாநாயகனை வைத்து புதிய படம் இயக்க முடிவு செய்தார். நாயகனுக்கு ஜோடியாக நடிக்க முன்னிலை நாயகிகளில் முதல் நாயகியாக இருப்பவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

“கதை நல்லாயிருக்கு. இதில் கதாநாயகனாக வி..சி..யை நடிக்க வைத்தால், நான் நாயகியாக நடிக்கிறேன். என் சம்பளத்தையும் குறைத்துக் கொள்கிறேன்” என்றாராம். அவர் விதித்த நிபந்தனையை டைரக்டர் ஏற்றுக் கொண்டார். பெரிய கதாநாயகனை நடிக்க வைக்கும் திட்டத்தை மாற்றிக் கொண்டார். காதலியின் வற்புறுத்தலால் கதாநாயகன் ஆன வி...சி...இப்போது, ‘ஜிம்’மே கதி என்று கிடக்கிறார். கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் வேகமாக தயாராகி வருகிறார்!