சினிமா துளிகள்
என்.டி.ஆர். படத்துக்கு டைரக்டர் மாறினார்!

என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறை கிரிஷ் டைரக்டு செய்கிறார்.
மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க, அவருடைய மகன் பாலகிருஷ்ணா முடிவு செய்து இருக்கிறார். என்.டி.ராமராவாக பாலகிருஷ்ணாவே நடிக்கிறார்.

முதலில் இந்த படத்தை தேஜா டைரக்டு செய்வார் என்று கூறப்பட்டது. இப்போது அவர் நீக்கப்பட்டு, கிரிஷ் டைரக்டு செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர், சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை டைரக்டு செய்தவர்!