சினிமா துளிகள்
இந்தி படங்களில் மட்டும்...!

இந்தி பட உலகில், ‘டாப்’ நடிகை பிரபலமாகி விட்டார்.
‘டாப்’ நடிகை, தமிழ் படங்களில் நடிக்க பத்து லட்சமே சம்பளமாக வாங்கி வந்தார். அதை விட பத்து மடங்கு அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்பதும், அதற்காக இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்பதும் அவர் கனவாக இருந்தது. அந்த கனவு அவருக்கு மிக சீக்கிரமே நிறைவேறியது.

இப்போது இந்தி பட உலகில், ‘டாப்’ நடிகை பிரபலமாகி விட்டார். அவர் கேட்கிற சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதனால் தொடர்ந்து இந்தி படங்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார்!