சினிமா துளிகள்
தமிழில், ‘டப்பிங்’ பேசிய கன்னட நடிகை!

கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி, ‘ராஜா லவ்ஸ் ராதே’ என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ராதிகா ப்ரீத்தி ‘எம்பிரான்’ என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்துக்காக அவரே தமிழில், ‘டப்பிங்’ பேசியிருக்கிறார்.

“இதற்கு காரணம், எங்க அப்பா கர்நாடகா என்றாலும், அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர். அதனால்தான் என்னால் தமிழில் சரளமாக பேச முடிகிறது” என்கிறார், ராதிகா ப்ரீத்தி. இவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘எம்பிரான்’ படத்தை டைரக்டர் மகிழ் திருமேனியின் உதவியாளர் கிருஷ்ண பாண்டி டைரக்டு செய்திருக்கிறார். பஞ்சவர்ணம், சுமலதா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். படம், அடுத்த மாதம் (ஜூலை) திரைக்கு வர இருக்கிறது.