சினிமா துளிகள்
விருதுகள் வேண்டாம்

விருது கிடைக்கும் என்ற எண்ணத்தோடு நான் எந்த படத்திலும் நடிப்பதில்லை என்று நடிகை வித்யா பாலன் கூறினார்.
‘‘ஆஸ்கர் விருது கிடைக்கும், தேசிய விருது கிடைக்கும் என்ற எண்ணத்தோடு நான் எந்த படத்திலும் நடிப்பதில்லை. அது தேவையில்லாத எதிர்பார்ப்பும் கூட. நடிப்பு என்பதை கூட இயல்பாக செய்து கொடுப்பதே என்னுடைய வேலை. வேலையை திருப்திகரமாக முடித்துவிட்டோம் என்ற மனநிறைவில் கிடைக்காத விருதுகளா, திரைப்பட விழாக்களில் கிடைக்கப்போகிறது..?’’

-வித்யா பாலன்.