சினிமா துளிகள்
ரூ.12 கோடியாக உயர்ந்த சம்பளம்!

சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி விட்டாராம் மூன்றெழுத்து டைரக்டர்!
பழைய படங்களின் கதைகளை ‘உல்ட்டா’ செய்து வெற்றி பெறுகிற மூன்றெழுத்து டைரக்டர், இதுவரை இயக்கியது மூன்றே மூன்று படங்கள்தான். அதற்குள் சென்னையின் இதயப்பகுதியான எழும்பூரில் கட்டப்பட்டுள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பில், அவர் வீடு வாங்கியிருக்கிறார்.

இதுவரை ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர், அடுத்த படத்துக்கு தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி விட்டாராம்!