சினிமா துளிகள்
மரண காட்சியில் திரிஷா நடிக்க மறுத்தார்!

விக்ரம் நடிக்க, ஹரி டைரக்‌ஷனில் உருவாகி வரும் `சாமி-2’ படத்தில் இருந்து திரிஷா விலகிக் கொண்டதற்கு என்ன காரணம்? என்பது `சஸ்பென்ஸ்’ ஆக இருந்து வந்தது. இப்போது அந்த `சஸ்பென்ஸ்’ உடைந்து இருக்கிறது.
`சாமி’ முதல் பாகத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் இறந்து போவது போலவும், அவருடைய இடத்தை கீர்த்தி சுரேஷ் பிடித்துக் கொள்வது போலவும் காட்சி அமைக்கப் பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மரண காட்சியில் நடிக்க திரிஷா மறுப்பு தெரிவித்தாராம். கதைக்கு அந்த காட்சி மிக மிக அத்தியாவசியமானது என்று டைரக்டர் ஹரி கருதினாராம். இதன் காரணமாகவே `சாமி-2’ படத்தில் இருந்து திரிஷா விலகிக் கொண்டதாக பேசப்படுகிறது.

திரிஷா நடிக்க மறுத்த வேடத்தில், இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துக் கொண்டிருக்கிறார்!