சினிமா துளிகள்
அஜித்குமாரின் அடுத்த `கால்ஷீட்' யாருக்கு?

அஜித்குமார் நடித்து வெளிவந்த சமீபகால படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `மங்காத்தா.' இது, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அஜித்குமாரின் 50-வது படம் என்ற விளம்பரத்துடன் வந்ததால், மங்காத்தா படம் கூடுதல் வரவேற்பை பெற்றது.

`மங்காத்தா' படம் முடியும்போதே இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல் முடித்து இருந்தார்கள். இதுபற்றி டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, ``மங்காத்தா படம் பாதி வளர்ந்தபோதே இரண்டாம் பாகத்துக்கான கதையை அஜித்குமாரிடம் கூறியிருந்தேன். அவர் சம்மதித்தால், அதற்கான திரைக்கதையை அமைக்கும் பணியை தொடங்கலாம்'' என்றார்.

அஜித்குமாரிடம் டைரக்டர் விக்ரம் குமார், வினோத், புஷ்கர் காயத்ரி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள். அஜித்குமார் கவனம் யார் பக்கம் திரும்புகிறதோ, அவரே அதிர்ஷ்டசாலி! 

தொடர்புடைய செய்திகள்