சினிமா துளிகள்
தயாரிப்பாளர்களின் டைரக்டர்!

டைரக்டர் ஹரி தயாரிப்பாளர்களின் டைரக்டர் என்று பெயர் வாங்கியிருக்கிறார்.
``தமிழ் திரையுலகில், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரையும் அடுத்து டைரக்டர் ஹரியும் `தயாரிப்பாளர்களின் டைரக்டர்' என்று பெயர் வாங்கியிருக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்காமல், குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்துக் கொடுத்து, லாபம் சம்பாதித்து கொடுப்பதால், இவர்கள் மூன்று பேரும் `தயாரிப்பாளர்களின் டைரக்டர்' என பெயர் வாங்கியிருக்கிறார்கள்'' என்று `சாமி-2' படவிழாவில் பாராட்டி பேசினார், பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம்!