‘நம்பர்-1’ இடத்தை பிடிக்க முயற்சி!

அந்த மூன்றெழுத்து நடிகையும், இப்போது ‘நம்பர்-1’ ஆக இருக்கும் நடிகையும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள்.

Update: 2018-09-25 10:19 GMT
இருவருக்கும் இடையே முதலில் தொழில் போட்டி இருந்தது. இந்த நிலையில், இருவரும் ஒரு ‘பார்ட்டி’யில் சந்தித்துக் கொண்டார்கள். இருவரும் மனம் விட்டு பேசினார்கள். அதில் இருந்து இரண்டு பேரும் தோழிகளாக மாறிவிட்டார்கள்.

என்றாலும், 2 பேரிடையேயும் சத்தமே இல்லாமல் தொழில் போட்டி இருந்து வருகிறது. ‘நம்பர்-1’ நடிகையின் நட்சத்திர அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவது, மூன்றெழுத்து நடிகைக்கு பிடிக்கவில்லையாம்.

‘நம்பர்-1’ இடத்தை எப்படியாவது பிடித்தே தீருவேன் என்று மூன்றெழுத்து நடிகை மனதுக்குள் சபதம் எடுத்து இருக்கிறாராம்!

மேலும் செய்திகள்