`கிராபிக்ஸ்' காட்சிகளுடன் சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள்

`ரெமோ,' `வேலைக்காரன்,' `சீமராஜா' ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் அடுத்து, `நேற்று இன்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் டைரக்‌ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Update: 2019-02-01 16:15 GMT
டைரக்டர் ஆர்.ரவிகுமார் இந்த படத்தை பற்றி கூறியதாவது:-

``இது, அறிவியல் சார்ந்த படம். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. அறிவியல் சார்ந்த படம் என்பதால், படத்தில் `கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடந்தது.

இது, சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான படமாக இருக்கும். படத்தில் அவர் விவசாயியாக நடிக்கிறார். ரகுல்பிரீத்சிங், வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள்.''

மேலும் செய்திகள்