தமிழ் கற்கிறார், மாளவிகா மோகனன்!

`பேட்டை' படத்தில் சசிகுமார் ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இப்போது `மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

Update: 2020-03-20 04:15 GMT
மாளவிகா மோகனனுக்கு தமிழ் தெரியாது. அதனால், `டியூசன்' மூலம் தமிழ் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, முன்னாள் நிருபராக இருந்த ஒரு பெண்ணை தனது தமிழ் ஆசிரியையாக மாளவிகா மோகனன் நியமித்து இருக்கிறார். அவர் எங்கே சென்றாலும், அந்த ஆசிரியையை உடன் அழைத்து செல்கிறார்!

மேலும் செய்திகள்