பிரபல இந்தி நடிகர் வருண் தவான் காதல் திருமணம்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் வருண் தவான். இவர் பிரபல இந்தி பட இயக்குனர் டேவிட் தவானின் மகன்.

Update: 2021-01-26 06:32 GMT
வருண் தவானும் ஆடை வடிவமைப்பாளர் நடாஷா தலாலும் காதலித்தனர். வருண் தவான் 6-வது வகுப்பு படித்தபோது முதல் முறை நடாஷாவை பார்த்தார். பள்ளியில் படித்தபோது நண்பர்களாக பழகினார்கள். அதன்பிறகு காதலிக்க தொடங்கினர். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வருண் தவான், நடாஷா திருமணம் கடந்த ஆண்டு மே மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனாவால் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் வருண் தவான், நடாஷா தலால் திருமணம் மராட்டிய மாநிலம் அலிபாக்கில் நடந்தது. 

திருமணத்தில் இந்தி திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினர். முன்னதாக திருமணம் நடந்த இடத்துக்கு வருண்தவான் வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கி சேதமடைந்தது. வருண் தவானுக்கு காயம் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்