‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் கதை உருவானது எப்படி?

தமிழ் சினிமாவில் கூட்டு குடும்ப கதைகள் எப்போதாவது ஒருமுறைதான் வருகின்றன.

Update: 2021-10-01 13:25 GMT
‘‘தமிழ் சினிமாவில் கூட்டு குடும்ப கதைகள் எப்போதாவது ஒருமுறைதான் வருகின்றன. அந்த கதைகளுக்கு அமோக வரவேற்பு இருந்தாலும், ஏனோ அப்படிப்பட்ட கதைகள் அதிகமாக படமாவதில்லை. அந்த குறையை ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ சரி செய்யும்’’ என்கிறார், டைரக்டர் நந்தா பெரியசாமி.

இவர், ‘ஒரு கல்லூரியின் கதை’, ‘மாத்தியோசி’, ‘ரேஷ்மி ராக்கெட்’ (இந்தி) ஆகிய படங்களை இயக்கியவர்.

‘‘இது, எங்கள் குடும்பத்தில் நடந்த கதை. அதுவே ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் கருவானது. அண்ணன்-தம்பிகளுக்குள் நடக்கும் கதை.

கவுதம் கார்த்திக், சேரன், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சவுந்தர்ராஜன், சிங்கம்புலி, நமோ நாராயணா, சினேகன், ஜோமல்லூரி, டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் சிவாத்மிகா, மவுனிகா, ‘மைனா’ சூசன், பிரியங்கா, மதுமிதா, ‘பருத்திவீரன்’ சுஜாதா உள்பட 45 நடிகர்-நடிகைகள் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பின்போது அனைத்து நடிகர்-நடிகைகளும் ஒரு குடும்பம் போல் வாழ்ந்தார்கள். அவர்களின் வசதிக்காக கேரவன்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் அதை யாரும் பயன்படுத்துவதில்லை. கூட்டமாக வெளியில் அமர்ந்து பேசுவார்கள்.

படத்தின் உச்சக்கட்ட காட்சி, படம் பார்ப்பவர்களை உருக்கி விடும். இரண்டு சொட்டு கண்ணீராவது வந்துவிடும்’’ என்கிறார்கள், டைரக்டர் நந்தா பெரிய சாமியும், தயாரிப்பாளர் பி.ரங்கநாதனும்.

மேலும் செய்திகள்