பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவின் பங்குனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.

Update: 2024-05-04 03:37 GMT

நியூயார்க்,

பப்புவா நியூ கினியாவில் உள்ள பங்குனாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பங்குனாவின் மெற்கு- வட மேற்கு திசையில் 153 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

170 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.64 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 154.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட கூடிய பகுதியில் பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்கு   உட்பட்ட  நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் அது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்