விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட் - வெளியிட்ட படக்குழு

இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறார்.

Update: 2022-01-23 18:10 GMT
இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2012-இல் வெளியான நான் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்த தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் சி.எஸ் அமுதன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று (23.1.2022) மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் நாளை மாலை 4.15 மணிக்கு விஜய் ஆண்டனி இயக்குநர் சி.எஸ் அமுதன் உள்ளிட்ட பலர் ட்விட்டர் ஸ்பேசில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும் செய்திகள்