திறப்பு விழா

டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி உருவாகியிருக்கும் ‘திறப்பு விழா’

Update: 2017-05-09 09:11 GMT
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டத்தை வலியுறுத்தி ‘திறப்பு விழா’ படம் உருவாகியிருக்கிறது.

இன்று ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சக ‘திறப்பு விழா’ என்ற படமாக உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை டைரக்டர் ஹரியிடம் ‘வேங்கை’, ‘சிங்கம்’, ‘பூஜை’ போன்ற படங்களில் அசோஸியேட்டாக பணியாற்றிய கே.ஜி.வீரமணி என்பவர் இயக்கியிருக்கிறார்.

இதில் புதுமுக நடிகர் ஜெயஆனந்த் கதாநாயகனாக நடிக்க பல படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் ரஹானா நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ஜி.எம்.குமார், ‘பசங்க’ சிவக்குமார், ‘ரோபோ’ சங்கர், சூப்பர் குட் லட்சுமணன், சிசர் மனோகர், ‘நாதஸ்வரம்’ முனீஸ், கவிதா பாலாஜி, ரெங்க நாயகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஆர்.பி.செல்வா, இசை - வசந்த ரமேஷ், பாடல்களை மறைந்த பாடலாசியரியர் நா.முத்துக்குமார் மற்றும் பழநிபாரதி, நந்தலாலா, ச.ஞானக்கரவேல், நிலம் ஆகியோர் எழுதியுள்ளனர். வசந்த ரமேஷ் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை பூமிகா இன்ப்ராடெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம்.ஜெரினா பேகம் தயாரித்துள்ளார். 

மேலும் செய்திகள்