பேட்ட

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம்.

Update: 2019-01-06 17:12 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

’பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், திரிஷா, நவாசுதின் சித்திக், சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராமதாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மேலும் செய்திகள்