லாஸ்ட் 6 ஹவர்ஸ்

தமிழ்-மலையாளத்தில் பரத் நடித்த திகில் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ சுரேஷ் கதை எழுத, சுனிஷ்குமார் இயக்கி இருக்கிறார், படத்தின் முன்னோட்டம்.;

Update:2020-03-06 15:10 IST
பரத் கதாநாயகனாக நடித்துள்ள ஒரு திகில் படத்துக்கு, ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக விவியாசன்த் நடித்து இருக்கிறார். படத்தை தயாரிக்கும் அனூப் காலித், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேஷ் கதை எழுத, சுனிஷ்குமார் இயக்கி இருக்கிறார். இவர் ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக இருந்தவர். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

“வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் 4 பேர் பெரிய திருட்டு செய்து, வாழ்க்கையில் ‘செட்டிலாக’ நினைக் கிறார்கள். அதன்படி, 4 பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை நடத்தி முடிக்க திட்ட மிடுகிறார்கள். ஆனால், அங்கு அவர்கள் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து விடுகிறது. அந்த சம்பவம் என்ன? திருட சென்றவர் களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களும், திகிலும் கலந்து உருவாக்கி இருக்கிறோம். பரத்துக்கு இது பெயர் சொல்லும் படமாக அமையும்.

படம் தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. சென்னை, கேரளா, துபாய் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இப்போது பின்னணி இசை சேர்ப்பு வேலை நடைபெறுகிறது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.”

மேலும் செய்திகள்