சுருதிஹாசன் குரலில் “டிரெயின்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் ‘டிரெயின்’ படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-12-23 18:29 IST

சென்னை,

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிரெயின்' படத்தில் நடிகை சுருதிஹாசன் , நரேன் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் மிஷ்கின் இயக்கும் 'டிரெயின்' படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷ்ன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் டார்க் திரில்லர் ஜானரில் 'டிரெயின்' படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சுருதிஹாசன் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் டார்க் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், “டிரெயின்” படத்தின் முதல் பாடலான ‘கன்னக்குழிக்காரா’ வெளியானது. மிஸ்கின் இசையில் கபிலனின் வரிகளில் சுருதி ஹாசன் இப்பாடலை பாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்