முகத்தில் சூடான மெழுகை ஊற்றிய வித்யுத் ஜம்வால் - வைரலாகும் வீடியோ
இதனை பார்த்த சிலர் கவலை தெரிவித்தாலும், பலர் பாராட்டி வருகின்றனர்.;
சென்னை,
நடிகர் வித்யுத் ஜம்வால் தனது முகத்தில், எரியும் மெழுகுவர்த்தி மெழுகைப் ஊற்றுவது போன்ற ஒரு வீடியோ வைரலாகி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை பார்த்த சில பார்வையாளர்கள் கவலை தெரிவித்தாலும், பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘மதராஸி’ படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹாலிவுட்டில் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியாக உள்ள்ளது.