சினிமா விமர்சனம்: நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல

கார்த்திகேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஸ் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள்.

Update: 2017-04-03 23:27 GMT
கதாநாயகி இல்லாத படம்.

சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் இவர்கள், அடுத்து பெரிய அளவில் ஒரு திருட்டை நடத்தி பணக்காரர்களாக ஆசைப்படுகிறார்கள். இவர்கள் விரித்த வலையில், நேர்மையான மனிதர் அருள்ஜோதியின் மகன் ஷாரியா
சிக்குகிறார்.

அருள்ஜோதியின் நேர்மையை பாராட்டி, ஒரு கோடீஸ்வரர் கொடுத்த ‘பிளாங்க் செக்’கை மோசடிக்கு பயன்படுத்துகிறது, திருட்டு கும்பல். ‘செக்’ மூலம் பணம் எடுத்த பின், ஷாரியாவை தீர்த்துக் கட்ட திட்டமிடுகிறது, அந்த கும்பல். அவர் களின் சதித்திட்டம் நிறைவேறியதா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’
கார்த்திகேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஸ், ஷாரியா ஆகிய நான்கு பேருமே கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்துகிறார்கள். பொன் விநாயகம் என்ற நேர்மையான மனிதரின் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார், அருள்ஜோதி.
நவின், பியோன் சரோ இருவரும் இசையமைத்து இருக்கிறார்கள். பின்னணி இசையும், ஏ.டி.பகத்சிங்கின் ஒளிப்பதிவும் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி செல்ல உதவியுள்ளன. தினேஷ் செல்வராஜ் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி, திகில் பட பாணியில் வேகம் பிடிக்கிறது.

மேலும் செய்திகள்