த்ரில்லர் கதை - ‘ஊமை செந்நாய்’ சினிமா விமர்சனம்

நகரின் முக்கியஸ்தர்களை பின் தொடரும் ஒரு துப்பறியும் நிறுவனம் . அதில் வேலை செய்யும் நாயகன், அரசியல்வாதி, காவல்துறை அதிகாரி என கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்குள் நடக்கும் வன்முறை துரோகம் என ஒரு திகில் சினிமாவாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

Update: 2021-12-17 10:35 GMT
ஓய்வுபெற்ற ஒரு காவல் துறை அதிகாரி, தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் உதவியாளராக கதாநாயகன் வேலை செய்கிறார். அப்போது அரசியல்வாதியை பற்றிய ஒரு ரகசிய சி.டி. கதாநாயகனிடம் சிக்குகிறது. அவரிடம் இருந்து அந்த சி.டி.யை கைப்பற்ற ரவுடி கூட்டத்தை அனுப்புகிறார்கள். இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படுகிறது. கதாநாயகன் சி.டி.யை ஒப்படைக்க மறுப்பதுடன், அதில் உள்ள ரகசியங்களை அறிய முயற்சிக்கிறார்.

ஆத்திரம் அடைகிற வில்லன்கள், கதாநாயகியை கொன்று விடுகிறார்கள். அவர்களை கதாநாயகன் எப்படி பழிதீர்க்கிறார்? என்பது கதை.

மைக்கேல் என்ற தங்கதுரை கதாநாயகன், ‘பார்த்திபன்’ ஆக வருகிறார். சனம்ஷெட்டி கதாநாயகியாகவும், கஜராஜ் வில்லன் மதிவாணனாகவும் நடித்து இருக்கிறார்கள்.

அழகப்பன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயகுமாரும், அருள் டி.சங்கர், ரத்னம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இருவரும் டைரக்டர் அர்ஜுனன் ஏகலைவனுடன் கைகோர்த்துக் கொண்டு குற்றப்பின்னணியிலான சிறந்த திகில் படம் என்ற பாராட்டுக்கு உழைத்து இருக்கிறார்கள்.

திரைக்கதை இன்னும் வேகமாக அமைந்திருந்தால், படம் பரவலாக பேசப்பட்டிருக்கும்.

மேலும் செய்திகள்