உலக நீரிழிவு நோய் தினம்

நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Update: 2021-11-15 05:30 GMT
லக அளவில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் விகிதம் அதிகமாக உள்ளது. நீரிழிவு தனிப்பட்ட நோய் அல்ல. இது வாழ்வியல் மாற்றம் காரணமாக ஏற்படும் குறைபாடு ஆகும். உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இயற்கையாக கணையம் இன்சுலினை சுரக்கும். 

இந்த சுரப்பியின் அளவில் உண்டாகும் குறைபாடே ‘நீரிழிவு நோய்’ என அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பில் ஏற்படும் மாறுபாடு, உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது.

நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 160 நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உலகின் மாபெரும் பிரச்சார இயக்கமான இது, 2006-ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாளாக இருந்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலக அளவில் 450 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் நீரிழிவு நோய்க் காரணமாக இறப்பு விகிதமும் மில்லியன் கணக்கில் இருந்து வருகிறது. நீரிழிவு நோய் தடுப்பு முறைகளை ஊக்குவித்து, சிகிச்சை முறைகளை வலுப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம்.

மேலும் செய்திகள்