காலை உணவும், உடல் எடையும்

காலை உணவைத் தவிர்க்கும்போது வயிற்று புண் போன்ற பிரச்சினைகள் வரும். உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. காலையில் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பிறகு உண்ணும்போது நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடக்கூடும்.

Update: 2021-11-08 05:30 GMT
ரு நாளை ஆரோக்கியமாகத் தொடங்குவதற்கு காலை உணவு முக்கியமானது. இரவில் நன்றாகத் தூங்கி காலையில் எழுந்ததும் சாப்பிடும் முதல் உணவு ஆரோக்கியமானதாகவும், புத்துணர்வு அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

முளைகட்டிய தானியங்கள், பாசிப்பயறு, நிலக்கடலை, பழங்கள் அல்லது பழச்சாறு, ராகி கஞ்சி, சத்துமாவு கஞ்சி, இட்லி, தோசை, சிறுதானிய பொங்கல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை காலை உணவாக சாப்பிடலாம்.

காலை உணவைத் தவிர்ப்பதால் வரும் பிரச்சினைகள் 
உடல் சோர்வு அடையும். நாள் முழுவதும் இயங்குவதற்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இரவு முழுவதும் உணவு சாப்பிடாமல், நீண்ட நேரம் வயிறு காலியாக இருப்பதால், அமிலம் அதிகமாக சுரந்து கொண்டே இருக்கும். 

இந்த நேரத்தில் காலை உணவைத் தவிர்க்கும்போது வயிற்று புண் போன்ற பிரச்சினைகள் வரும். உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. காலையில் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பிறகு உண்ணும்போது நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடக்கூடும்.

காலை உணவின் முக்கியத்துவம்  
உடல் எடையைக் குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என பலர் கருதுகின்றனர். அவர்கள் முதலில் தவிர்ப்பது காலை உணவை தான். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும். 

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவை தவிர்ப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். ஓரிரு நாட்கள் காலை உணவை தவிர்க்கும்போது பெரிய வித்தியாசம் தெரியாது. நாளடைவில் இது உடல்நிலையில் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.

சில உணவு முறைகள் காலை உணவை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றன. இது ஆரோக்கியமானதா? என மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட வேண்டும். காலை உணவை அரசன் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி உள்ளது. அரசன் போன்று அனைத்து ஊட்டச்சத்துகள் மிக்க உணவை சாப்பிட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும்.

மேலும் செய்திகள்

போபா டீ