அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை; இயக்குநர் சீனுராமசாமி

அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை என டுவிட்டரில் இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-23 02:35 GMT
சென்னை,

‘கம்பெனி புரொடக்‌ஷன்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அசோக்குமார். இவர் நடிகர் சசிகுமாரின் உறவினர். இந்நிலையில், நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் 2 பக்க கடிதம் ஒன்றும் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் இருந்து, சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியவில்லை என்பதற்காக கீழ்த்தரமாக மிரட்டப்பட்டு உள்ளார்.  அதனால் தற்கொலை முடிவை அவர் எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பைனான்சியர் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அன்புச்செழியனுக்கு எதிராக திரையுலகமே கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக டுவிட்டரில் இயக்குநர் சீனுராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. எம்.ஜி.ஆர்., சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள் நான் நியாயம் பக்கமே என தெரிவித்துள்ளார்.

கூடல் நகர், விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று மற்றும் தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனுராமசாமி ஆவார்.

மேலும் செய்திகள்