அரசியலில் கூட்டணியா மலேசியாவில் வருகிற 6-ந்தேதி ரஜினி- கமல் ஆலோசனை?

ரஜினிகாந்தும்- கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறி உள்ள நிலையில் மலேசியாவில் ஜனவரி 6-ஆம் தேதி இருவரும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajinikanth #Kamalhaasan

Update: 2018-01-02 06:44 GMT
சென்னை

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினி அரசி யல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் ரஜினி முந்தி கொண்டதால் அடுத்து கமல்ஹாசன் எத்தகைய அரசியல் பிரவேசத்தை முன்னெடுத்து செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கமல்ஹாசனும், ரஜினியும்  திரைத்துறையில் போட்டி யாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் இருவரும் பேசி ஆலோசனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று முடிவு செய்ததும் அவர் முதன் முதலில் அதுபற்றி கமல்ஹாசனிடம் தான் விவாதித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்க உள்ளனர். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு அவர்கள் இருவரும் நேரிடையாக சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.  அப்போது இருவரும் தனியாக அமர்ந்து தமிழக அரசியல் குறித்து பேச உள்ளனர்.

இந்த சந்திப்பின்போது கமல், ரஜினி இருவரும் தமிழக அரசியல் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. அது அரசியலில் ரஜினியும், கமலும் கூட்டணி அமைப் பார்களா? அல்லது தனித் தனி பாதையில் அரசியல் பயணத்தை மேற்கொள்வார்களா? என்பதற்கு விடை அளிப்பதாக இருக்கும்.


#RajiniMandram | #Rajinikanthpoliticalentry | #Rajinikanth | #Kamalhaasan | #Tamillatestnews

மேலும் செய்திகள்