உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்

போர்பஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ள உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் பொழுதுபோக்கு நட்சத்திரங்கள் பட்டியலில் இந்திய நடிகர்கள் சல்மான் கான், அக்‌ஷய் குமார் இடம் பிடித்து உள்ளனர்.

Update: 2018-07-17 10:09 GMT
புதுடெல்லி,

போர்ப்ஸ் பத்திரிகை  வெளியிட்டு உள்ள உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் அமெரிக்கன் குத்துச்சண்டை வீரர் பிலாய்ட் மேவேதர் முதலிடம் பிடித்து உள்ளார். ரஜினிகாந்தின்  2.0  படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய் குமார் மற்றும் சல்மான் கான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். அக்‌ஷய் குமார்  76 வது இடத்தில் உள்ளார். சல்மான் கான் 82 வது இடத்தில் உள்ளார்.

கடந்த 12 மாதங்களில், உலகின் 100 சிறந்த வருவாய் ஈட்டும் பொழுதுபோக்கு நட்சத்திரங்கள் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( சுமார் இந்திய மதிப்பில் ரூ. 43,025 கோடி)  ஈட்டி உள்ளனர். இது கடந்த வருடத்தை விட 22 சதவீதம் அதிகம். 11 சூப்பர் ஸ்டார்கள்  $ 100 மில்லியனை கடந்து உள்ளனர். அக்‌ஷய் குமார் 40.5 (சுமார்  ரூ.276 கோடி) மில்லியன் டாலர்கள் சம்பளமாக பெற்று உள்ளார். அக்‌ஷய் குமார் டாய்லட், மற்றும்  எக் ப்ரேம் கதா  ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.  இதன் மூலம் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்க பிரச்சாரங்களில் கவனம் செலுத்த வைத்து உள்ளார். பேட்மேன்  கிராமப்புற மக்களுக்கு மலிவான சுகாதார பேட்களை வழங்கிய ஒரு மனிதரைப் பற்றி கதை.  இந்த படம் வெற்றிகரமாக ஓடி லாபத்தை ஈட்டியது. மேலும் 20  க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடித்து உள்ளார். 

சல்மான் கான் 37.7 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பெற்று உள்ளார்  (சுமார் ரூ257 கோடி) "டைகர் ஜிந்தா ஹாய்" போன்ற வெற்றி படங்களின் தயாரிப்பில் லாபம் மற்றும் விளம்பரங்களில் நடிக்கிறார்.

281 மில்லியன் டாலர்கள் ( சுமார் ரூ. 1919 கோடி)  வருவாயுடன்  பட்டியலில் குத்துச்சண்டை வீரர் பிலாய்ட் மேவேதர் முதலிடத்தில் உள்ளார். நடிகர் ஜார்ஜ் குளூனி (இரண்டாவது),  ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கெய்லி ஜென்னர் (மூன்றாவது இடம்)  கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ( 10-வது இடம்) பாப் ஸ்டார் கேத்தி பெர்ரி (19),டென்னிஸ் நட்சத்திரம்  ரோஜர் பெடரர் (23), பாடகர் பியோனஸ் (35), எழுத்தளர் ஜே. கே. ரோலிங் (42) மற்றும் கோல்ப் வீரர்  டைகர் வுட்ஸ் (66) ஆகியோர்  இடம் பெற்று உள்ளனர்.

மேலும் செய்திகள்