ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழா; எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கமல்ஹாசன் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்

Update: 2019-02-11 06:29 GMT
சென்னை

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

திருமணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் , ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்