விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஹசிம் அம்லா

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஹசிம் அம்லா தகர்த்தார்.

Update: 2019-01-20 05:25 GMT
போர்ட் எலிசபெத்,

கிரிக்கெட் உலகின் ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்த நிலையில், கோலியின் சாதனைகளில் ஒன்றை தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா முறியடித்துள்ளார். 27 சதங்களை குறைந்த இன்னிங்ஸ்களில் அடித்த விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் அடித்து அம்லா முறியடித்துள்ளார். விராட் கோலி 169 இன்னிங்ஸ்களில் 27 சதம் அடித்ததே அதிவேகம் என்று இருந்ததை, அம்லா 167 இன்னிங்ஸ்களில் அடித்து முறியடித்துள்ளார். 

நவீன கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் அம்லா, தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கிற்கு அஸ்திவாரமாக கடந்த சில ஆண்டுகளாக திகழ்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 267 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்