ஐ.பி.எல். வரலாற்றில் 150 கேட்சுகள்; தோனி புதிய சாதனை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர், ஜித்தேஷ் சர்மாவை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

Update: 2024-05-05 17:28 GMT

தர்மசாலா,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐ.பி.எல்.லில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றவரான எம்.எஸ். தோனி நடப்பு தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர், ஜித்தேஷ் சர்மாவை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன்படி. ஐ.பி.எல். வரலாற்றில் 150 கேட்சுகளை பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவற்றில், விக்கெட் கீப்பராக 146 கேட்சுகள், பீல்டிங்கின்போது 4 கேட்சுகள் என மொத்தம் 150 கேட்சுகளை பிடித்துள்ளார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. அவர் 3 விக்கெட்டுகளும், 43 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது.

168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6 வெற்றிகள், 5 தோல்விகள் என சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 வெற்றிகள், 7 தோல்விகள் என பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்