மகளின் முகத்தை முதன் முறையாக காட்டிய அனுஷ்கா- வைரல் வீடியோ

விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியின் மகள் வாமிகாவின் புகைப்படம் முதன் முதலாக வெளியாகியுள்ளது.

Update: 2022-01-23 17:04 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்  விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி  பாலிவுட் நடிகையும் தனது  காதலியுமான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு  தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது.  குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டுள்ள கோலி - அனுஷ்கா தம்பதி   குழந்தையின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை இதுவரை வெளியிடவில்லை.

”நாங்கள் எங்கள் குழந்தைக்கு தனியுரிமையைத் தேடுகிறோம், மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி அவளது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம் ”என அனுஷ்கா சர்மா கூறியிருந்தார். 

இந்த நிலையில், விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியின் மகள் வாமிகாவின் புகைப்படம் முதன் முதலாக வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த கோலி, அதை தனது குழந்தைக்கு அர்ப்பணிக்கும் வகையில் தாலாட்டு சைகை செய்தார்.  அப்போது பெவிலியனில் இருந்த அனுஷ்கா சர்மா தனது மகள் வாமிகாவுடன் இணைந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார். 

நேரலையின் போது, இந்தக் காட்சிகள் ஒளிபரப்பானது. வாமிகாவின் புகைப்படம் முதன் முதலாக பொதுவெளியில் வெளியாகியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே,  விராட் கோலியின் மகள்  புகைப்படத்தை வெளியிட்டதை  நீக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ள அவரது ரசிகர்கள், புகைப்படம் வெளியிட்ட நிறுவனத்தை வசைபாடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்