பெண்கள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

Update: 2022-03-24 01:14 GMT
Image Courtesy : @englandcricket
கிறிஸ்டசர்ச்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிறிஸ்டசர்ச் மைதானத்தில் இன்று நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள்  அணியின் கேப்டன் ஹெதர் நைட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த தொடரில் இன்று காலை நடைபெற இருந்த தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணியிகளுக்கு இடையிலான மற்றொரு போட்டி மழை காரணமாக தற்போது வரை தொடங்கவில்லை. 

மேலும் செய்திகள்