பெண்கள் உலகக்கோப்பை : ஆஸ்திரேலிய அணிக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணையித்தது வங்காளதேசம்

நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்தது.;

Update:2022-03-25 08:59 IST
Image Courtesy : ICC
வெலிங்டன்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் வெலிங்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 25 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வங்காளதேச  அணியும் மோதுகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள்  அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்க வீராங்கனைகயாக களமிறங்கிய முர்ஷிதா 12 ரன்களிலும் ஷர்மின் அக்தர் 24 ரன்களிலும் வெளியேறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பின்வரிசையில் லதா மோண்டல் 33 ரன்கள் குவித்தார்.

மழை காரணமாக போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவில்  வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

மேலும் செய்திகள்