தொடரும் கோலியின் ரெக்கார்டு வேட்டை...சச்சின் சாதனை உடைப்பு

விராட் கோலி 28,000 ரன்களை பூர்த்தி செய்து சச்சினின் சாதனையை தகர்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.;

Update:2026-01-12 00:49 IST

சென்னை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது .

இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவர் 25 ரன்களை பூர்த்தி செய்த போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 28,000 ரன்களை அதிவேகமாக பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ஸ்களில் 28,000 ரன்களை பூர்த்தி செய்திருந்தார்.

ஆனால் தற்போது தனது 624-வது இன்னிங்ஸ்சிலேயே விராட் கோலி 28,000 ரன்களை பூர்த்தி செய்து சச்சினின் சாதனையை தகர்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். விராட் மற்றும் சச்சினைத் தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது பேட்ஸ்மேன் இலங்கையின் குமார் சங்கக்காரா ஆவார்.

வேகமாக 28,000 ரன்கள்:

விராட் கோலி - 624 இன்னிங்ஸ்

சச்சின் டெண்டுல்கர் - 644 இன்னிங்ஸ்

குமார் சங்கக்காரா - 666 இன்னிங்ஸ்கள்

Tags:    

மேலும் செய்திகள்