ஐபிஎல் : ருதுராஜ் கெய்க்வாட் ,டேவான் கான்வே அதிரடி : சென்னை அணி 202 ரன்கள் குவிப்பு

இன்று நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதுகின்றன

Update: 2022-05-01 15:50 GMT
Image Courtesy : IPL
மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இன்று நடைபெறும்   46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதுகின்றன.போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சன்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் ,களமிறங்கினர் .தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இருவரும் 100 ரன்கள் சேர்த்தனர் 

இருவரும் சிறப்பாக விளையாடி .பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர் .ருதுராஜ் கெய்க்வாட்  அரைசதம் அடித்தார்.தொடர்ந்து கான்வே 39 பந்துகளில் அரைசதம் அடித்தார் . 

அரைசதம் கடந்த பிறகு இருவரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் . மார்கோ  ஜான்சென்  வீசிய ஒரு ஓவரில் 2 சிக்ஸர் .1 பவுண்டரி பறக்கவிட்டார் கான்வே .

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட நிலையில்  99 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து  வெளியேறினார் .

அதன்பின்னர் வந்த கேப்டன் டோனி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கான்வே அதிரடி காட்ட  இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.டேவான் கான்வே 85 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்  .

இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணி 203 ரன்கள் இலக்குடன் விளையாடுகிறது 

மேலும் செய்திகள்